”சச்சின் விக்கெட்டை எடுக்க தோனி ஆலோசனைதான் காரணம்” - ஷதாப் ஜகாடி

”சச்சின் விக்கெட்டை எடுக்க தோனி ஆலோசனைதான் காரணம்” - ஷதாப் ஜகாடி
”சச்சின் விக்கெட்டை எடுக்க தோனி ஆலோசனைதான் காரணம்” - ஷதாப் ஜகாடி

2010ம் ஆண்டு சென்னை அணி ஐபிஎல் தொடரை வென்ற போது, அந்தப் போட்டியில் மும்பை வீரர் சச்சினின் விக்கெட்டை எடுத்ததற்கு தோனியின் ஆலோசனைதான் காரணம் எனப் பந்துவீச்சாளர் ஷதாப் ஜகாடி தெரிவித்துள்ளார்.

2010ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை வீழ்த்தியவர் ஷதாப் ஜகாடி. மிக முக்கியமான நேரத்தில் அந்த விக்கெட்டை அவர் வீழ்த்தினார். இந்நிலையில் சச்சினின் விக்கெட்டை எடுத்ததற்கு தோனியின் ஆலோசனைதான் காரணம் எனப் பந்துவீச்சாளர் ஷதாப் ஜகாடி தெரிவித்துள்ளார்.

அது குறித்து நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட அவர், “என்னுடைய முதல் இரண்டு ஓவர்களில் 21 ரன்களை விட்டுக்கொடுத்தேன். அடுத்து மும்பை அணியின் இடதுகை பேட்ஸ்மேன் அபிஷேக் நாயர் பேட்டிங் செய்தார். அப்போது தோனி என்னிடம் வந்து, நீ இப்போது பந்துவீச வேண்டாம் என்று ஆலோசனை தெரிவித்தார். மும்பை அணியின் வலதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எப்படிச் சிறப்பாகப் பந்து வீச வேண்டும் என்று பயிற்சி எடுத்திருந்தோம்.

அந்தப் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற 169 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. களத்திலிருந்த சச்சின் டெண்டுல்கர் 15 ஆவது ஓவரில் அரை சதம் அடிக்கும் நிலையிலிருந்தார். அப்போது மும்பை அணி 6 ஓவரில் 74 அடிக்க வேண்டும் என்ற நிலையிலிருந்தது. அப்போது தான் ஜகாடியை பந்துவீச அழைத்தார் தோனி.

முதல் பந்தில் சச்சின் பவுண்டரி அடித்த நிலையில் அடுத்த பந்தில் அவுட் ஆனார். இது குறித்து மேலும் பேசிய ஜகாடி, அந்தப் போட்டியில் ஹைடனை சரியாக நிற்க வைத்து பொல்லார்ட் விக்கெட்டை டோனி வீழ்த்தினார்.

எந்தப் பந்துவீச்சாளரை எப்போது பந்துவீச அனுமதிக்க வேண்டுமென்று தோனிக்கு தெரியும். தோனி எப்போதும் பந்துவீச்சாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டதே இல்லை. அவர் எங்களுக்கு முழு சுதந்திரமும் கொடுப்பார். எதாவது தவறு என உணர்ந்தால் மட்டுமே அவர் தலையிட்டுச் சரி செய்வார் எனத் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com