“மும்பை இந்தியன்ஸை பழி வாங்கும் எண்ணமில்லை” - தோனி ‘கூல்’

“மும்பை இந்தியன்ஸை பழி வாங்கும் எண்ணமில்லை” - தோனி ‘கூல்’

“மும்பை இந்தியன்ஸை பழி வாங்கும் எண்ணமில்லை” - தோனி ‘கூல்’
Published on

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார்.

13வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று அபுதாபி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் பேட்டிங் செய்ய உள்ளது.

டாஸ் வென்ற பின்ன பேசிய தோனி, “அனைவரும் சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும். முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளேன். ஏனென்றால் இரவில் பனிப்பொழிவு இருக்கும். நல்ல நிலையில் இருக்கும்போது விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும். முதல் ஆறு நாள் தனிமைப்படுத்தல் மிகவும் கடினமாக இருந்தது. அனைவரும் அந்த நேரத்தை நன்றாக பயன்படுத்தினோம். யாரும் அதிருப்தி அடையவில்லை. பயிற்சிகள் மிகவும் நன்றாக இருந்தது. 14 நாட்களுக்குப் பிறகு வெளியே வந்தது நன்றாக இருந்தது. ஒரு ஜெண்டில்மேன் கேம் விளையாடப்போகிறோம். மும்பை இந்தியன்ஸை பழி வாங்கும் எண்ணம் இல்லை” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com