'ரிவ்யூ' கேட்பதில் தோனிதான் எப்போதும் கில்லி ! இன்றைய போட்டியிலும் நிரூபனம்

'ரிவ்யூ' கேட்பதில் தோனிதான் எப்போதும் கில்லி ! இன்றைய போட்டியிலும் நிரூபனம்
'ரிவ்யூ' கேட்பதில் தோனிதான் எப்போதும் கில்லி ! இன்றைய போட்டியிலும் நிரூபனம்

இந்திய அணியில் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். நீண்ட காலம் கேப்டனாக இருந்த தோனி 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்தும், கடந்த ஆண்டு 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார். தன்னுடைய கேப்டன் பொறுப்பை அவர் விராட் கோலியிடம் ஒப்படைத்தார். 

விராட் கோலியிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்த போது, களத்திலும் பயிற்சியின் போதும் அவர் இரண்டாவது கேப்டனாகவே செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்ற நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இப்பொழுது விளையாடி வருகிறார். இந்தப் போட்டிகளின் போது இக்கட்டான நேரங்களில் விராட் கோலிக்கு தோனி ஆலோசனை கூறுவார். அதற்கு நல்ல பலன்களும் கிடைக்கும். 

இந்நிலையில், ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இப்போது நடைபெற்று வருகிறது. ஆசியக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தத் தொடரிலும் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு மகேந்திர சிங் தோனி உதவி செய்து வருகிறார். ஹாங்காங் உடனான முதல் போட்டியில் நீண்ட நேரம் ஆகியும் விக்கெட் விழாத நிலையில், ரோகித் சர்மாவை பீல்டிங்கில் நிற்க வைத்துவிட்டது கொஞ்ச நேரம் தோனி எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார்.

அதன் பின்னர் விக்கெட்கள் மளமளவென சரிந்தது. பேட்டிங்கில் தோனி சொதப்பினாலும், இந்திய அணியின் வெற்றிக்கு இந்த வகையில் தோனி தனது பங்களிப்பை செலுத்தினார். அதேபோல், வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியிலும் தோனி ஒரு மேஜிக் செய்தார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது. முதலில் விளையாடிய வங்கதேசம் அணி 16 ரன்னில் 2 விக்கெட்களை இழந்தது. 5.1 ஓவரிலே இரண்டு விக்கெட்கள் வீழ்ந்துவிட்டது. அடுத்த மூன்று ஓவர்களில் விக்கெட் விழாததால் ஸ்பின்னர்கள் பந்துவீச அழைக்கப்பட்டனர்.

9வது ஓவரை சாஹல் வீச, 10வது ஓவரை ஜடேஜா வீச வந்தார். களத்தில் ஷகிப் அல் ஹாசன், முஷ்பிகுர் ரஹிம் இருந்தனர். ஷகிப் அல் ஹசனை வீழ்த்துவதற்கு ஏற்றார் போல தோனி, பீல்டரை நிற்க வைத்தார். அதன்படி அடுத்த பந்திலேயே ஷகிப் அல் ஹசன் தோனி நிற்க வைத்த பீல்டரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதேபோல ரிவ்யூ கேட்பதிலும் தோனிதான் கில்லி. இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்று வரும் இன்றைய போட்டியிலும் ரிவ்யூ கேட்பதில் தான் ஒரு மாஸ்டர் என நிரூபித்தார் தோனி.

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரராக இமாம் உல் ஹக் ஆடிக்கொண்டிருந்தார். அப்போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் பவுலிங் செய்துக்கொண்டிருந்தார். ஆட்டத்தின் 7 ஆவது ஓவரில் சாஹல் வீசிய கடைசிப் பந்து இமாம் உல் ஹக்கின் காலில் பட்டது. உடனடியாக களத்தில் இருந்த நடுவர் அது எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் இல்லை என தெரிவித்தார். இதனை நிராகரித்த தோனி, உடனடியாக ரிவ்யூ கேட்டார். ரீபேளையில் இமாம் உல் ஹக் அவுட் என தெரிந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட் வீழ்ந்தது. இதனை ரசிகர்கள் DRS என்றால் Decision Review Systerm இல்லை இப்போது இது Dhoni Review System என சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com