‘பாண்டிங்கை விட தோனியே சிறந்த கேப்டன்’ அஃப்ரிடி சொன்ன காரணம் இதுதான்..!

‘பாண்டிங்கை விட தோனியே சிறந்த கேப்டன்’ அஃப்ரிடி சொன்ன காரணம் இதுதான்..!
‘பாண்டிங்கை விட தோனியே சிறந்த கேப்டன்’ அஃப்ரிடி சொன்ன காரணம் இதுதான்..!

பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஷஹித் அஃப்ரிடி தனக்கு தெரிந்தவரை கேப்டன்சியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பாண்டிங்கை விட இந்திய அணியின் மகேந்திர சிங் தோனியே சிறந்தவர் என தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த அஃப்ரிடி ட்விட்ட்டரில் ரசிகர்களுடனான கேள்வி-பதில் உரையாடலில் ‘தோனி தான் சிறந்த கேப்டன்’ என தெரிவித்துள்ளார். 

அவரிடம் ரசிகர் ஒருவர் பாண்டிங் மற்றும் தோனியில் யார் சிறந்த கேப்டன் என கேட்டதற்கு “எனக்கு தெரிந்தவரை தோனி தான் சிறந்த கேப்டன். ஏனென்றால் அவர் இளம் வீரர்கள் அடங்கிய அணியை கட்டமைத்து வழிநடத்தினார். ஆனால் பாண்டிங் விஷயத்தில் ஸ்டீவ் வாக் தான் ஆஸ்திரேலிய அணியை கட்டமைத்தார். அந்த அணியை தான் பாண்டிங் வழிநடத்தினார். அதனால் தோனியா? பாண்டிங்கா? என வரும் போது தோனி தான் சிறந்தவர்” என பதில் அளித்துள்ளார் அஃப்ரிடி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com