இரண்டாவது தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் சென்னையில் நாளை தொடங்குகிறது.
சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டியில், நடப்புச் சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் , திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன. இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில், இந்திய அணி வீரர் மகேந்திர சிங் தோனி, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தொடக்க விழா மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து 7.15 மணிக்கு போட்டி தொடங்கும் என்றும் டிஎன்பிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல்லைப் போன்று டிஎன்பிஎல் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.