“முதல் நான்கு விக்கெட்டும் தோனியின் கைகளில்” - ரசிகர்கள் நெகிழ்ச்சி

“முதல் நான்கு விக்கெட்டும் தோனியின் கைகளில்” - ரசிகர்கள் நெகிழ்ச்சி

“முதல் நான்கு விக்கெட்டும் தோனியின் கைகளில்” - ரசிகர்கள் நெகிழ்ச்சி
Published on

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 55 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்கள் கருணரத்னே 10, குசல் பெராரா 18 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் ஆகி வெளியேறினர். 

அதனை தொடர்ந்து குசல் மெண்டீஸ் ஜடேஜா பந்துவீச்சில் தோனியிடம் ஸ்டம்பிங் ஆகி ஆட்டமிழந்தார். பின்னர், பெர்னாண்டோ 20 ரன்னில் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார். இலங்கை அணி 55 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. மேத்யூஸ் - திரிமனே ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறது. அந்த அணி 25 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது. 

நடப்பு உலகக் கோப்பை தொடரில் விக்கெட் கீப்பிங்கில் தோனியின் மெஜிக்கை அதிகம் பார்க்க முடியாமல் இருந்து வந்தது. அவர் பெரிதாக விக்கெட் அதிகம் எடுக்காமல் இருந்தார். சில போட்டிகளில் விமர்சனம் செய்யும் வகையில் அவரது விக்கெட் கீப்பிங் அமைந்திருந்தது.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான போட்டியில் முதல் நான்கு விக்கெட்டும் தோனியின் கைகளில் ஆட்டமிழக்கப்பட்டது. மொத்தம் மூன்று கேட்ச், ஒரு ஸ்டம்பிங். இதனை தோனியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com