dhoni and raina dancing in rishabh pant sister wedding
dhonix page

ரிஷப் பண்ட் சகோதரி திருமணம் | நாட்டு நாட்டு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ‘தல’ தோனி.. #ViralVideo

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ரிஷப் பண்ட் சகோதரி திருமண நிகழ்வில் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published on

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஆறு ஆண்டுகள் ஆன, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போது ஐபிஎல் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சென்னை ரசிகர்களால் அன்புடன் ‘தல’ என அழைக்கப்படும் தோனியின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் இன்றும் மைதானங்களில் குவிந்து வருகின்றனர். கிரிக்கெட்டை அனுபவித்து, ரசித்து விளையாட விரும்புவதாக தெரிவித்திருக்கும் தோனி, மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கும் நடப்பு ஐபிஎல் தொடருக்காக சென்னைக்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சகோதரி சகியின் திருமண நிகழ்வு முசொவுரியில் நேற்று நடைபெற்றது. இதற்காக, தோனி மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று டெஹ்ராடூன் பகுதிக்கு புறப்பட்டுச் சென்றனர். நேற்று நடைபெற்ற திருமண சங்கீத் நிகழ்வில் ’ஆர்ஆர்ஆர்’ படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஒலிக்கப்பட்டது. அப்போது தோனி, ரெய்னா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் நடனமாடி மகிழ்ந்தனர். அதில் தோனி குத்தாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதேபோல், மற்றொரு பாடலுக்கு தோனியும், சாக்‌ஷி தோனியும் உணர்ச்சி பொங்க பாடி மகிழ்ந்தனர். இந்த வீடியோவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

dhoni and raina dancing in rishabh pant sister wedding
”சிறுவனைப்போல் கிரிக்கெட்டை ரசித்து விளையாட விரும்புகிறேன்” - தோனி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com