“தோனியின் டீம் மீடிங் வெறும் 2 நிமிடம் தான்” - பார்திவ் படேலின் நினைவுகள்

“தோனியின் டீம் மீடிங் வெறும் 2 நிமிடம் தான்” - பார்திவ் படேலின் நினைவுகள்

“தோனியின் டீம் மீடிங் வெறும் 2 நிமிடம் தான்” - பார்திவ் படேலின் நினைவுகள்
Published on

தோனி எப்போது கடைசி 2 நிமிடம் தான் டீம் மீடிங் நடத்துவார் என கிரிக்கெட் வீரர் பார்திவ் படேல் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக தோனியுடனான அனுபவங்கள் குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் பேசி வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் வேறு எதையாவது பேசினாலும் கூட, அவர்களிடம் தோனி குறித்து ஒரு கேள்வியையாவது தொகுப்பாளர் மற்றும் செய்தியாளர்கள் முன் வைத்துவிடுகின்றனர். இதனால் பேட்டியளிப்பவர்களும் தோனி குறித்த கருத்தைப் பேசிவிடுகின்றனர்.

இந்நிலையில் தோனியுடனான அனுபவங்கள் பேசியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கீப்பர் பார்திவ் படேல், “தோனி கடைசி 2 நிமிடங்களில் தான் அணியின் கூட்டத்தை நடத்துவார். 2008ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் கூட கடைசி இரண்டு நிமிடத்தில் தான் கூட்டத்தை நடத்தினார். அவர் 2019ஆம் இறுதிப் போட்டியிலும் அப்படித்தான் அணியின் கூட்டத்தை நடத்தியிருப்பார் என உறுதியாகக் கூறுகிறேன். தோனிக்கு தெளிவாகத் தெரியும், எந்த வீரரிடம் இருந்து என்ன வேண்டும் என்று” இவ்வாறு கூறினார். 

2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 13 போட்டிகளில் விளையாடிய பார்திவ் படேல் 302 ரன்களை குவித்தார். 2010ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவர், பின்னர் கொச்சி டஸ்கெர்ஸ், டெக்கன் சார்ஜெர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஆனால் இன்னும் தான் தோனி மீது அதே மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“பயப்பட வேண்டாம் நாம் பயிர்கள் அல்ல” - வெட்டுக்கிளி சர்ச்சையில் சஞ்சை மஞ்ரேக்கர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com