\
மனைவியின் ஆபரேஷன் சக்சஸ்: ரசிகர்களுக்கு தவான் நன்றி

மனைவியின் ஆபரேஷன் சக்சஸ்: ரசிகர்களுக்கு தவான் நன்றி

மனைவியின் ஆபரேஷன் சக்சஸ்: ரசிகர்களுக்கு தவான் நன்றி
Published on: 

தனது மனைவியின் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது என்றும் இதற்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானின் மனைவி ஆயிஷா. இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஆபரேஷன் செய்ய வேண்டி வந்தது. இக்கட்டான ஆபரேஷன் என்பதால் மனைவியுடன் இருக்க நினைத்தார் தவான். இதையடுத்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் மூன்று போட்டிகளில் இருந்து விலகினார். 

இந்நிலையில், ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் தவான். ’தற்போது என் மனைவியின் உடல்நிலை தேறி வருகிறது. இதற்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி’ என்றும் அவர் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com