என்னாது தவான், ரோகித் சர்மாவுக்கே இடமில்லையா..?

என்னாது தவான், ரோகித் சர்மாவுக்கே இடமில்லையா..?
என்னாது தவான், ரோகித் சர்மாவுக்கே இடமில்லையா..?

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த டெஸ்ட் போட்டிக்கான அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெறவில்லை. மயங்க் அகர்வால், முகமது சிராஜ் தங்களது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்கள். இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட வேகபந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தவான், ரோகித் இருவரும் நன்றாக விளையாடி வரும் நிலையில் இருவரில் ஒருவருக்கு கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஷிகர் தவானுக்கு பதிலாக மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கருண் நாயர் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து சிலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அணி வீரர்கள் விவரம்:-

விராட் கோலி
கே.எல்.ராகுல்
ப்ரித்வி ஷா
மயங்க் அகர்வால்
புஜாரா
அஜிங்கியா ரகானே
ஹனுமன் விஹாரி
ரிஷப் பந்த்
ரவிசந்திர அஸ்வின்
ரவிந்திர ஜடேஜா
குல்தீப் யாதவ்
முகமது ஷமி
உமேஷ் யாதவ்
முகமது சிராஜ்
ஷர்துல் தாக்கூர்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மேற்கு இந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அக்டோபர் 4-ந்தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. அக்டோபர் 21-ந்தேதி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. டி20 கிரிக்கெட் தொடர் 4-ந்தேதி தொடங்குகிறது.

டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட்: அக். 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை - ராஜ்கோட்
2-வது டெஸ்ட் - அக். 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை - ஐதராபாத்

ஒருநாள் கிரிக்கெட் தொடர்

முதல் ஒருநாள்  - அக். 21-ந்தேதி - கவுகாத்தி
2-வது ஒருநாள்  - அக். 24-ந்தேதி - இந்தூர்
3-வது ஒருநாள்  - அக். 27-ந்தேதி - புனே
4-வது ஒருநாள்  - அக். 29-ந்தேதி - மும்பை
5-வது ஒருநாள் - நவ. 1-ந்தேதி - திருவனந்தபுரம்

டி20 கிரிக்கெட் தொடர்

முதல் டி20  - நவ. 4-ந்தேதி - கொல்கத்தா
2-வது டி20 - நவ. 6-ந்தேதி - லக்னோ
3-வது டி20  - நவ. 11-ந்தேதி - சென்னை

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com