\
விஜய் சங்கர் காயம், இந்திய ஏ அணியில் ஷிகர் தவான்!

விஜய் சங்கர் காயம், இந்திய ஏ அணியில் ஷிகர் தவான்!

விஜய் சங்கர் காயம், இந்திய ஏ அணியில் ஷிகர் தவான்!
Published on

விஜய் சங்கர் காயம் அடைத்துள்ளதால் அவருக்குப் பதிலாக ஷிகர் தவான் இந்திய ஏ அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க ஏ அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து அதிகாரபூர்வமற்ற 5 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது. இதன் முதல் 3 ஒரு நாள் போட்டிகளுக்கு மணீஷ் பாண்டே கேப்டனாகவும் அடுத்த இரண்டு போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும் நியக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போட்டியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் விஜய சங்கர், பெரு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். இதையடுத்து, சரியான ஃபார்மில் இல்லாத ஷிகர் தவான், கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய ஏ அணியில் சேர்க்கப் பட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com