வளர்ந்து வரும் வீரர் விருதை தட்டிச் சென்ற தேவ்தத் படிக்கல்!
நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணியின் தொடக்க வீரராக விளையாடி பட்டையை கிளப்பியவர் தேவ்தத் படிக்கல். பெங்களூர் அணிக்கு கிறிஸ் கெயில் இல்லாத குறையை நிரப்பியுள்ளார் அவர். அவரது பொறுமையான நேர்த்தியான ஆட்டம் பெங்களூர் அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத்தந்துள்ளது.
முதல் ஐபிஎல் சீசன் என்பது அல்லாமல் அவரது ஆட்டத்திறன் அபாரமாக இருந்தது. 15 போட்டிகளில் விளையாடியுள்ள தேவ்தத் 473 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 அரைசதங்கள் அடங்கும். இவர் சிக்ஸர்களை காட்டிலும் நேர்த்தியான கிளாசிக் பவுண்டரிகளை அடிப்பதில் வல்லவராக இருந்துள்ளார்.
இந்நிலையில், முதல் சீசனிலே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கலுக்கு வளர்ந்து வரும் வீரர் விருது அளிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு இந்த விருது டெல்லி அணிக்காக விளையாடிய சுப்மன் கில்லுக்கு அளிக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு ரிஷப் பண்ட்க்கும், 2017ம் ஆண்டு பஸில் தம்பிக்கும், 2016ம் ஆண்டு முஸ்தபிகூர் ரஹ்மானுக்கும் அளிக்கப்பட்டது.