"ஒரு வாரம் பயிற்சி" சென்னை வரும் சிஎஸ்கே வீரர்கள் யார் ? யார்?

"ஒரு வாரம் பயிற்சி" சென்னை வரும் சிஎஸ்கே வீரர்கள் யார் ? யார்?

"ஒரு வாரம் பயிற்சி" சென்னை வரும் சிஎஸ்கே வீரர்கள் யார் ? யார்?
Published on

இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான பயிற்சிக்காக சென்னையில் தங்கி ஒரு வாரம் பயிற்சியை மேற்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி கேப்டன் தோனி உள்ளிட்ட 6 பேர் சென்னையில் பயற்சி மேற்கொள்ள இருக்கின்றனர்.

இதனையடுத்து சுரேஷ் ரெய்னா ஏற்கெனவே சென்னை வந்தடைந்தார். இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து தோனி இன்று சென்னை புறப்பட்டு சென்னை வந்தடைந்துள்ளார். இவர்களை தவிர கரண் சர்மா, தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா மற்றும் மோனு குமார் ஆகியோர் சென்னையில் ஒருவாரம் பயிற்சியை மேற்கொள்ள இருக்கின்றனர். இந்தாண்டு மார்ச் 29 ஆம் தேதி நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா பொது முடக்கம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையடுத்து அனைத்து அணிகளும் அதற்கான பயிற்சிகளை தொடங்க இருக்கிறது. சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஐபிஎல் மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே அதாவது ஆகஸ்ட் மாதமே துபாய் புறப்படும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com