PV.Sindhupt desk
விளையாட்டு
டென்மார்க் ஓபன் இறகுப்பந்து தொடர்: அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி
டென்மார்க் ஓபன் இறகுப்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்துள்ளார்.
இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, டென்மார்க் ஓபன் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்டார். விறு விறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 18-க்கு 21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்த பி.வி.சிந்து, இரண்டாவது செட்டை 21க்கு 19 என்ற கணக்கில் தனதாக்கிக் கொண்டார்.
PV.Sindhupt desk
இதனை அடுத்து, அனல் பறந்த 3-வது செட்டை ஸ்பெயின் வீராங்கனை கரோலினாமரின் கைப்பற்றி வெற்றி வாகை சூடினார். இதன் மூலம், அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். உலகின் ஆறாம் நிலை வீராங்கனையாக இருக்கும் மரினுடன் இதுவரை 16 போட்டிகளில் விளையாடியுள்ள பி.வி.சிந்து, 5 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த வாரம் பின்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆர்க் டிக் ஓபன் இறகுப்பந்து தொடரிலும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துஅ ரையிறுதியில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.