பகலிரவு டெஸ்டில் கோலி டி20 போல ஆடுவார்..! - டேனியல் வெட்டோரி

பகலிரவு டெஸ்டில் கோலி டி20 போல ஆடுவார்..! - டேனியல் வெட்டோரி

பகலிரவு டெஸ்டில் கோலி டி20 போல ஆடுவார்..! - டேனியல் வெட்டோரி
Published on

இந்தியா-பங்களாதேஷ் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நாளை நடைபெறவுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல்முறை விளையாடவுள்ளது. இது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள போட்டி குறித்து பேசியுள்ள பங்களாதேஷ் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி, “இது முற்றிலும் ஒருநாள் அல்லது டி20 போட்டியை போல அமையும். எனவே ஒரு பெருங்கூட்டம் மைதானத்தில் இருக்கும். இந்திய வீரர்கள் எங்கிருந்தாலும் உற்சாகப்படுத்தப்படுவார்கள். அதனால் விராட் கோலி பேட்டிங் செய்ய வரும்போது, டி20 போட்டி போல களமிறங்குவார். இரு அணி வீரர்களும் களமிறங்கிய பின்னர் நிலை முற்றிலும் மாறும். எந்த ஒரு வீரருமே டெஸ்ட் போட்டி போல விளையாடாத இருக்கும் சூழல் ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com