“இன்று எங்களுக்கு ஒரு சவாலான போட்டி” - டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ்

“இன்று எங்களுக்கு ஒரு சவாலான போட்டி” - டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ்

“இன்று எங்களுக்கு ஒரு சவாலான போட்டி” - டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ்
Published on

ஹைதராபாத்திற்கு எதிரான இன்றை போட்டி சவாலானதாக இருக்கும் என டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இரண்டாவது தகுதிச்சுற்றில் மோதும். 

எனவே இன்றைய போட்டியை வென்று இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு செல்ல வேண்டும் என டெல்லி மற்றும் ஹைதராபாத் இரண்டு அணிகளிலும் தீவிர பயற்சி எடுத்துள்ளன. அதே சமயம் ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் பேரிஸ்டோவ் இல்லையென்பது பெரும் பின்னடைவு. இதேபோன்று டெல்லி அணியில் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா இல்லாதது பெரும் இழப்பு.

இந்நிலையில் இன்று இரு அணிகளும் மோதிக்கொள்வது தொடர்பாக பேசிய ஸ்ரேயாஸ், “நாங்கள் எங்கள் மீது இருந்த நம்பிக்கையால் ஹைதராபாத் அணியை அவர்களின் சொந்த மண்ணிலேயே வென்றோம். அதேபோன்று அவர்களும் எங்களை சொந்த மண்ணில் வென்றனர். இந்த இரண்டு அணிகளின் நம்பிக்கையால் இன்றைய போட்டி கடுமையானதாக இருக்கும். அவர்களில் சிலர் முக்கிய வீரர்கள் இல்லை. எங்கள் அணியும் ரபாடா இன்றி களமிறங்குகிறோம். எனவே போட்டி கடினமானதாக செல்லும். ஆனால் ஒரு சிறந்த போட்டி இன்று நடக்கும்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com