162 ரன்கள் குவித்தது ஹைதராபாத் : இலக்கை எட்டுமா டெல்லி அணி?
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி 162 ரன்கள் குவித்துள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே இன்று ஐபிஎல் வெறியேற்று சுற்றுப்போட்டி நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியில் கீப்பர் சஹா 8 (9) ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த குப்தில் மற்றும் மணிஷ் பாண்டே ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 36 (19) ரன்களில் குப்தில் அவுட் ஆக, 30 (36) ரன்களில் பாண்டேவும் வெளியேறினார்.
பின்னர் வந்த கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி 28 (27) ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக அதிரடிகாட்டிய விஜய் ஷங்கர் 25 (11) ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதைத்தொடர்ந்து கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் சரிந்தன. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 162 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் கீமோ பவுல் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.