அகில இந்திய ஹாக்கி போட்டி: சாம்பியன் பட்டத்தை தட்டித்தூக்கிய டெல்லி அணி!

கோவில்பட்டியில் நடைபெற்ற 12 வது அகில இந்திய ஹாக்கி போட்டியில் நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
delhi champion
delhi championpt desk

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்தரை ஹாக்கி மைதானத்தில் கடந்த 18 ஆம் தேதி முதல் 12வது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வந்தன. அதில் இந்தியா முழுவதிலும் இருந்து மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டன. அணிகள் அனைத்தும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளும், காலியிறுதி, அரையிறுதி போட்டிகளும் நடந்தன.

hockey tournament
hockey tournamentpt desk

இந்நிலையில், நேற்றிரவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணியும், செகந்திரபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியும் மோதின. போட்டி தொடங்கியது முதல் இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடின. போட்டி தொடங்கிய 15வது நிமிடத்தில் நியூடெல்லி அணி தனது முதல் கோலை அடித்தது. 18வது நிமிடத்தில் செகந்திராபாத் அணி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தது.

இதையடுத்து நியூடெல்லி அணி வீரர்கள் மிகுந்த ஆக்ரோஷத்துடன் ஆடி ஆட்டத்தின் 29 மற்றும் 48 வது நிமிடங்களில் மேலும் இரு கோல்கள் அடித்தனர். இறுதியில் 3 - 1 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. முன்னதாக 3 மற்றும் 4 வது இடங்களுக்கான போட்டியில் நியூ டெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணியும் மோதின. இதில் ஷீட் அவுட் முறையில் 5 - 4 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றி பெற்றது.

all india hockey match
all india hockey match

இதைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அர்ஜுனா விருது பெற்ற இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் முகமது ரியாஸ், முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ, கே.ஆர் குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் ஆகியோர் பங்கேற்றனர். வெற்றி பெற்ற அணிக்கு பரிசு கோப்பையையும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசையும் வழங்கினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com