\
ஐஎஸ்எல் கால்பந்து: வெற்றியுடன் தொடங்கிய டெல்லி

ஐஎஸ்எல் கால்பந்து: வெற்றியுடன் தொடங்கிய டெல்லி

ஐஎஸ்எல் கால்பந்து: வெற்றியுடன் தொடங்கிய டெல்லி
Published on

நான்காவது சீசன் ஐஎஸ்எல் கால்பந்து தொடரை டெல்லி டைனமோஸ் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற போட்டியில் புனே சிட்டி எஃப்சி , டெல்லி டைனமோஸ் அணிகள் மோதின. புனே சிட்டி எஃப்சி அணிக்கு எதிரான விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் டெல்லி அணி வெற்றியை வசப்படுத்தியது. டெல்லி அணிக்காக பாலினோ, சாங்த்தே, மிரபாஜே ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். புனே அணிக்காக எமிலியானோ அல்ஃபாரோ, மார்க்கஸ் டேபர் ஆகியோர் கோல் அடித்தனர். இந்த சீசனை டெல்லி டைனமோஸ் அணி வெற்றியுடன் தொடக்கியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com