ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி

ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி

ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி

இந்த வெற்றியால் டெல்லி  அணி புள்ளிப்பட்டியலில் பெங்களூரை பின்னுக்குத் தள்ளி 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பஞ்சாப் அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 64-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் பிரித்வி ஷா இல்லாத சூழலில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னருடன் சர்ஃபராஸ் கான் இறக்கிவிடப்பட்டார்.

டேவிட் வார்னர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து சர்ஃபராஸ் கானுடன் மிட்செல் மார்ஷ் இணைந்தார். அதிரடியாக விளையாடிய சர்ஃபராஸ் 32 ரன்கள் (16 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், நிதானமாக விளையாடிய மிட்செல் மார்ஷ் அரை சதம் அடித்தார். அவர் 63 ரன் (48 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ரபாடா வேகத்தில் ரிஷி தவானிடம் பிடிபட்டார். இதையடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.

இதனைத்தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஜிதேஷ் சர்மா  44 ரன்கள் எடுத்தார். ராகுல் சாஹர் 25 ரன்கள் அடித்து களத்தி இருந்தார்.

டெல்லி அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இந்த வெற்றி மூலம் டெல்லி  அணி புள்ளிப்பட்டியலில் பெங்களூரை பின்னுக்குத் தள்ளி 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 13 போட்டியில் 6 வெற்றிகள் மட்டுமே பெற்ற பஞ்சாப் அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்தது.

வெற்றிக்குப்பின் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில், '' எங்களது அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்று அடுத்த போட்டியில் தோல்வியை சந்திக்க வேண்டும் என்று விரும்பினோம். இறுதியாக அதை அடைய முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த முன்னேற்றத்திற்கு பிரித்வி ஷாவின் பங்களிப்பு மிக முக்கியமானது'' என்று கூறினார்.  

டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வரும் சனிக்கிழமை அன்று எதிர்கொள்கிறது.

இதையும் படிக்கலாம்: ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி


Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com