\
ஐபிஎல் மெகா ஏலம்: கலீல் அகமது, சேட்டன் சகாரியாவுக்கு அடிச்சது 'லக்'

ஐபிஎல் மெகா ஏலம்: கலீல் அகமது, சேட்டன் சகாரியாவுக்கு அடிச்சது 'லக்'

ஐபிஎல் மெகா ஏலம்: கலீல் அகமது, சேட்டன் சகாரியாவுக்கு அடிச்சது 'லக்'
Published on

டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ. 5.25 கோடிக்கு வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதைத் தேர்வு செய்துள்ளது.

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று 2வது நாளாக நடக்கிறது. இந்த மெகா ஏலத்தில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் தற்போது 2 புதிய அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஏலப்பட்டியலில் மொத்தம் 600 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 290 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி, ரூ.1½ கோடி, ரூ.1 கோடி, 75 லட்சம், 50 லட்சம், 40 லட்சம், 30 லட்சம், 20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு 46 வீரர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது.

கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய சேட்டன் சகாரியா இந்த முறை ரூ. 4.20 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதை டெல்லி அணி ரூ. 5.25 கோடிக்கு எடுத்துள்ளது. இலங்கை வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்தா சமீராவை லக்னோ அணி ரூ. 2 கோடிக்கு வாங்கியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com