"எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது" - டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் ட்வீட் !

"எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது" - டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் ட்வீட் !
"எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது" - டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் ட்வீட் !

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் பிக்பாஷ் கிரிக்கெட் லீக் போட்டியில் பங்கேற்க இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சந்தீப் லாமிசனேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேபாள நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிசனே. சுழற்பந்துவீச்சாளரான இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 கிரிக்கெட் தொடரான பிக்பாஷ் லீக்கில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். இந்நிலையில் தனுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சந்தீப் லாமிசனே தன்னுடைய ட்விட்டர் பதிவில் "எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. கடந்த சிலநாள்காக எனக்கு உடல்வலி இருந்து வருகிறது. ஆனால் இப்போது என்னுடைய உடல்நிலை மெல்ல மெல்ல தேறி வருகிறது. எல்லாம் நல்லபடியாக சென்றால் விரைவில் மைதானத்துக்கு திரும்பிவிடுவேன். எனக்காக அனைவரும் வேண்டிக்கொள்ளுங்கள்" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com