பிருத்வி ஷாவை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்
துபாயில் நடைபெற்று வரும் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டெல்லி அணிக்கு அதிரடி தொடக்கத்தை கொடுத்துள்ளார் ஓப்பனிங் பேட்ஸ்மேன் பிருத்வி ஷா.
23 பந்துகளில் 42 ரன்களை குவித்திருந்தார் அவர். இதில் 5 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும்.
இந்நிலையில் பிருத்வி ஷாவை புகழ்ந்துள்ளார் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்..
“பிருத்வியின் இன்றைய ஆட்டம் அற்புதமாக இருந்தது. ஐபிஎல் ஆட்டங்களில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மாஸ்டர் கிளாஸ் இன்னிங்க்ஸை பார்க்க துவங்கியுள்ளோம்.
வேகப்பந்து வீச்சு, சுழல் பந்து வீச்சு என இரண்டிலுமே கெட்டியான பேட்ஸ்மேன் அவர். டெக்னீக்களாகவும் ஸ்ட்ராங் பேட்ஸ்மேன்.
கடந்த முறை செய்த தவறுகளிலிருந்து தானாகவே பாடம் கற்றுக் கொண்டு அதை சரி செய்துள்ளார். அவரது ஆட்டத்திற்கு உதவும் வகையில் சிறு சிறு டிப்ஸ்களை மட்டுமே நான் சொல்லியுள்ளேன்.
அணியில் அவரது ரோலை பிருத்வி சரியாக செய்து வருகிறார்” என முன்னாள் இங்கிலாந்து வீரரான பீட்டர்சன்னுடனான கலந்துரையாடலில் பாண்டிங் தெரிவித்துள்ளார்.
டெல்லி அணி இருபது ஓவர் முடிவில் 196 ரன்களை குவித்துள்ளது.