”அத டெலிட் பண்ணுப்பா..! இப்படிலாமா அசிங்கபடுத்துறது”- ரசிகரின் கேள்விக்கு DK-ன் கலகல பதில்

”அத டெலிட் பண்ணுப்பா..! இப்படிலாமா அசிங்கபடுத்துறது”- ரசிகரின் கேள்விக்கு DK-ன் கலகல பதில்
”அத டெலிட் பண்ணுப்பா..! இப்படிலாமா அசிங்கபடுத்துறது”- ரசிகரின் கேள்விக்கு DK-ன் கலகல பதில்

'DK-உடன் கேள்வி கேளுங்கள்' என தினேஷ் கார்த்திக் பதிவிட்ட டிவிட்டர் பதிவில், ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கலகலப்பாக பதிலளித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

இந்திய அணியின் மூத்த விக்கெட் கீப்பர்-பேட்டரான தினேஷ் கார்த்திக் பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கவிருக்கும், பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான வர்ணனையாளர் பணியில் களமிறங்க உள்ளார். 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சில அட்டகாசமான செயல்திறனுடன், ராய்ல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக், 3 வருட இடைவெளிக்கு பிறகு இந்திய டி20க்கான அணியில் இடம் பிடித்தார். 2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்திருந்தார், ஆனால் தற்போது இந்தியா மூத்த வீரர்களிடமிருந்து முன்னேறி, 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை இளம் வீரர்களை கொண்டு தயார் செய்துவருவதால், அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது வர்ணனையாளராக இடம்பிடித்திருந்தார் தினேஷ் கார்த்திக், அது இந்திய ரசிகர்களாலும் விரும்பப்பட்டது. இந்நிலையில் வரவிருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரிலும் கார்த்திக் மீண்டும் வர்ணனையாளராக களமிறங்குவார் என்று தெரிகிறது.

இந்நிலையில் தொடருக்கு முன்னதாக, கார்த்திக் தனது டிவிட்டர் வலைப்பக்கத்தில் DK-உடன் கேள்வி கேளுங்கள் என்ற பதிவை ட்வீட் செய்திருந்தார். அந்த பதிவில் ஒரு ரசிகர் தினேஷ் கார்த்திக்கை ட்ரோல் செய்ய முயன்றார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் கார்த்திக் விளையாடிய ஸ்கோர் கார்டை ஸ்கிரீன் ஷாட் எடுத்து கமண்டில் பதிவிட்டு, அதைப் பற்றி ஏதாவது சொல்லும்படி கார்த்திக்கிடம் கேட்டார். அந்த போட்டியில் கார்த்திக் 25 பந்துகளில் 6 ரன்கள் எடுத்ததால், இந்தியா போட்டியில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

ரசிகரின் அந்த கேள்விக்கு தினேஷ் கார்த்திக் கோபப்படாமல் அதை எதிர்கொண்ட விதம், பார்க்கும் அனைவரையும் ரசிக்க வைத்தது. புத்திசாலித்தனமான அவருடைய அணுகுமுறை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

ரசிகரின் அந்த கேள்விக்கு பதிலளிக்கையில், கார்த்திக், ”அந்த புகைப்படத்தை நீக்குமாறு தலையில் கை வைத்திருக்கும் எமோஜியோடு பதிவிட்டு” கார்த்திக் கிண்டலாக கேட்டார்.

மேலும் தொடர்ந்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் எந்த இரண்டு அணிகள் விளையாடும் என்று கேள்விக்கு, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என்று பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com