முதன்முறையாக டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்திய இந்திய அணி

முதன்முறையாக டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்திய இந்திய அணி

முதன்முறையாக டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்திய இந்திய அணி
Published on

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் முறையை இந்திய வீராங்கனைகள் முதல்முறையாக பயன்படுத்தினர். 

டெர்பி கவுண்டி மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. 282 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியி முதல் 2 விக்கெட்டுகளை விரைவாக இழந்தது. இதையடுத்து 3ஆவது விக்கெட்டுக்கு கைகோர்த்த நடாலி ஸ்கீவர்-ஹீதர் நைட் ஜோடி ரன்குவிப்பில் ஈடுபட்டது. இந்த ஜோடியை பிரிக்க இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ், 18ஆவது ஒவரில் தீப்தி ஷர்மாவை பந்துவீச அழைத்தார். தீப்தி ஷர்மா வீசிய ஓவரின் முதல் பந்தை ஸ்வீப் செய்ய முயன்ற ஸ்கீவர், கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால், கள நடுவர் அசன் ராசா விக்கெட் கொடுக்க மறுத்தார். இதையடுத்து, மற்ற வீராங்கனைகளுடன் ஆலோசித்த இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ், டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்தினார். பந்து பேட்டில் பட்டு சென்றது வீடியோ பதிவில் தெளிவாகத் தெரியவே, மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்தார். மகளிர் கிரிக்கெட் போட்டியில் டிஆர்எஸ் முறை பயன்படுத்தப்பட்டது அதுவே முதல்முறையாகும். இதன்மூலம் மகளிர் கிரிக்கெட்டில் முதல்முறையாக டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்திய அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது. அந்த போட்டியில் இந்திய மகளிர் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com