ஃபார்முக்கு திரும்பிய தீபக் சாஹர்: டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்குமா?

ஃபார்முக்கு திரும்பிய தீபக் சாஹர்: டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்குமா?
ஃபார்முக்கு திரும்பிய தீபக் சாஹர்: டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்குமா?

கடந்த 6 மாதங்களாக எவ்வித போட்டிகளிலும் விளையாடாத தீபக் சாஹர், இந்த போட்டியின் மூலம் அணிக்கு திரும்பியதுடன், அதில் அபாரமாக பந்துவீசி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் இந்த அசத்தலான வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள் மிக முக்கியமான காரணமாக அமைந்தனர். குறிப்பாக, வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கிட்டத்தட்ட கடந்த 7 மாதங்களாக காயத்தால் எவ்வித போட்டிகளிலும் விளையாடாத தீபக் சாஹர், இந்தப் போட்டியின் மூலம் அணிக்கு திரும்பியதுடன், அதில் அபாரமாக பந்துவீசி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து தனது கம்பேக் குறித்து பேசியிருந்த தீபக் சாஹர் கூறுகையில், ''டி20 உலகக்கோப்பையில் இடம்பெறுவது என் கையில் இல்லை. இந்திய அணிக்கு நான் மீண்டும் திரும்பியதில் மகிழ்ச்சி. ஒரு வீரராக அணிக்கு திரும்பும்போது விக்கெட்டுகளை எடுக்க வேண்டியது அவசியம். ஏனெனில் நான் ஆறு மாதங்களுக்கு மேல் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனதால் தற்போது மீண்டும் சிறப்பான கம்பேக் கொடுக்க நினைத்தேன். அந்த வகையில் இந்த தொடருக்கு முன்னதாக நான் சில பயிற்சி போட்டிகளில் பங்கேற்று பந்துவீசி இருந்தேன். அதில் என்னால் சிறப்பாக பந்து வீச முடிந்தது. இந்த போட்டியிலும் என்னுடைய பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது நான் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்று இருப்பதால் ஆரம்பத்தில் எனக்கு பதட்டம் இருந்தது. தற்போது இந்த முதல் ஒருநாள் போட்டியில் விளையாடி முடித்த பிறகு சற்று இலகுவாக உணர்கிறேன். அதோடு எனது உடல் நிலையும் சீராக இருக்கிறது'' எனக் கூறினார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இடம்பிடித்துள்ள தீபக் சாஹர், டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் அவர் இடம்பெறவில்லை. எனவே டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தீபக் சாஹரும் சேர்க்கப்பட வேண்டும் என ரசிகர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

இதையும் படிக்க: '2023 உலகக் கோப்பையில் இந்த வீரர் முக்கியமானவராக இருப்பார்' - சபா கரீம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com