கோலாகலமாக நடந்த தீபக் சாஹர் - ஜெயா திருமணம்

கோலாகலமாக நடந்த தீபக் சாஹர் - ஜெயா திருமணம்

கோலாகலமாக நடந்த தீபக் சாஹர் - ஜெயா திருமணம்
Published on

தீபக் சாஹர் - ஜெயா பரத்வாஜ் திருமணம் ஆக்ராவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர், ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். காயம் காரணமாக ஐபிஎல் 15வது சீசன் முழுக்க தீபக் சாஹர் ஆடவில்லை. இந்நிலையில், தீபக் சாஹர் அவரது காதலி ஜெயா பரத்வாஜை இன்று திருமணம் செய்துகொண்டார்.

2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் ஒரு போட்டியின்போது தனது நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். ஜெயாவும் காதலுக்கு மைதானத்திலே சம்மதம் தெரிவிக்க இவர்கள் கடந்த ஓராண்டுக்கு மேலாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் தீபக் - ஜெயா ஆக்ராவில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் இன்று திருமணம் செய்துகொண்டனர். இதில் ராகுல் சாஹர், மற்ற நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இவர்களது திருமண புகைப்படத்தை ராகுல் சாஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  தீபக் சாஹரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் 60 கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்கலாம்: நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் அதிகமாக ட்விட்டரில் பேசப்பட்ட அணி எது தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com