சாதிப்போம்ல: மகளிர் கிரிக்கெட்டில் உலக சாதனை!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 320 ரன்கள் குவித்து இந்தியாவின் தீப்தி ஷர்மா, பூனம் ரவுத் ஜோடி உலக சாதனைப் படைத்தது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் நான்கு நாடுகள் கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீராங்கனைகள் இந்தச் சாதனையை நிகழ்த்தினர். தீப்தி ஷர்மா 188 ரன்களும், பூனத் ரவுத் 109 ரன்களும் விளாசினார். கடந்த 2008 ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்தின் சாரா டெய்லர், அட்கின்ஸ் ஜோடி குவித்திருந்த 268 ரன்கள் என்ற முந்தைய சாதனையை இந்திய வீராங்கனைகள் முறியடித்துள்ளனர்.
மேலும் போட்டி ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் தீப்தி ஷர்மா இரண்டாவது இடம் பிடித்தார். ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த பெலிண்டா கிளார்க் கடந்த 2008-ஆம் ஆண்டு டென்மார்க் அணிக்கு எதிரான போட்டியில் 229 ரன்கள் குவித்து இந்தப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி 249 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.