'ஆண் குழந்தை மரணம்' - கிறிஸ்டியானா ரொனால்டோவை கலங்க செய்த பேரிழப்பு

'ஆண் குழந்தை மரணம்' - கிறிஸ்டியானா ரொனால்டோவை கலங்க செய்த பேரிழப்பு

'ஆண் குழந்தை மரணம்' - கிறிஸ்டியானா ரொனால்டோவை கலங்க செய்த பேரிழப்பு
Published on

பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவின் ஆண் குழந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.

நட்சத்திர கால்பந்து வீரர், போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் ரொனால்டோவுக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளன. அவரது காதலி ஜார்ஜினாவுக்கு அண்மையில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இதில் ஆண் குழந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக ரொனால்டோ தமது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார். பெற்றோராக தான் மிகுந்த வேதனையில் இருப்பதாகவும், எனினும் பெண் குழந்தை தற்போது ஆறுதல் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், " ஆழ்ந்த சோகத்துடன் எங்களின் ஆண் குழந்தை இறந்துவிட்டதை தெரிவிக்கிறேன். இந்த வலியை அனைத்து பெற்றோர்களும் உணர முடியும். பெண் குழந்தைதான் தற்போது எங்களுக்கு வலிமையையும், ஆறுதலையும் கொடுக்கிறது.

https://www.instagram.com/p/CcgHsWLLaf5/?utm_source=ig_web_copy_link

எனது குழந்தையை காப்பாற்ற முயன்ற மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி. இந்த இழப்பினால் நொந்துபோயுள்ள எங்களின் தனிமையை உறுதி செய்ய வேண்டுகிறேன். எங்களின் ஆண் குழந்தை , நீ எங்களின் தேவதை, உன் மீது எப்போதும் அன்பு செலுத்துவோம்" என தெரிவித்துள்ளார்.




X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com