கிரிக்கெட் வாரியத்துடன் மோதல்...வேலை இழந்த ஆஸி. வீரர்கள்

கிரிக்கெட் வாரியத்துடன் மோதல்...வேலை இழந்த ஆஸி. வீரர்கள்

கிரிக்கெட் வாரியத்துடன் மோதல்...வேலை இழந்த ஆஸி. வீரர்கள்
Published on

ஊதியம் தொடர்பாக கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்தம் முடிவடைந்ததால், 200க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் வேலை இழந்த நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை இருதரப்பிலும் கடந்த நவம்பரில் தொடங்கியது. ஆனால், கிரிக்கெட் வாரியம் நிர்ணயித்த ஊதியம் மற்றும் போனஸ் தொகை ஆகியவை குறித்த ஒப்பந்தத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் நிராகரித்தனர். ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து கடைசிநாளான நேற்றும் (ஜூன் 30) எந்தவித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் வேலை இழந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக வீரர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் சிட்னியில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது. வரும் 12ல் தொடங்கும் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான தொடரைப் புறக்கணிப்பது குறித்தும் வீரர்கள் அந்த கூட்டத்துக்குப் பின்னர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தம் தொடர்பான பிரச்னை முடியும்வரை வீரர்கள் கண்காட்சிப் போட்டிகளில் விளையாடவும் தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் வீரர்கள் ஐசிசி விதிகளின்படி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இங்கிலாந்தில் நடந்துவரும் மகளிர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன்னதாகவே மொத்த ஊதியத்தையும் வழங்கி விட்டது. இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், ஊதிய ஒப்பந்தம் குறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகம் உரிய  முடிவெடுக்காவிட்டால், இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் தொடரில் பங்கேற்க எந்தவீரரும் இருக்க மாட்டார்கள் என்று கூறியிருந்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்கள் இடையிலான ஒப்பந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளதை கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியுடன் கவனித்து வருகிறார்கள். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com