டிவிலியர்ஸின் உலக சாதனை

டிவிலியர்ஸின் உலக சாதனை

டிவிலியர்ஸின் உலக சாதனை
Published on

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 9,000 ரன்களைக் கடந்து தென்னாப்பிரிக்க வீரர் டிவிலியர்ஸ் உலக சாதனை படைத்தார்.

நியூசிலாந்து அணிக்கெதிரான வெலிங்டனில் நடந்த 3ஆவது ஒருநாள் போட்டியில் 85 ரன்கள் குவித்த டிவிலியர்ஸ், 205 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இதன்மூலம் 228 இன்னிங்ஸ்களில் 9,000 ரன்கள் குவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை டிவிலியர்ஸ் முறியடித்தார். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 32.2 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com