“விராட் கோலியை திமிர்பிடித்தவர் என்றே முதலில் நினைத்தேன்”- மனம்திறந்த ஏ.பி.டி வில்லியர்ஸ்

"நான் விராட் கோலியை முதன்முதலில் சந்தித்தபோது அவர் மிகவும் துணிச்சலாகவும் திமிர்பிடித்தவராகவும் இருக்கிறாரே என்று நினைத்தேன்" ஏ.பி.டி வில்லியர்ஸ்.
“விராட் கோலியை திமிர்பிடித்தவர் என்றே முதலில் நினைத்தேன்”- மனம்திறந்த ஏ.பி.டி வில்லியர்ஸ்

“நான் விராட் கோலியை முதன்முதலில் சந்தித்தபோது அவர் மிகவும் திமிர்பிடித்தவராக இருக்கிறாரே என்று நினைத்தேன்” என்று கூறியிருக்கிறார் ஏ.பி.டி வில்லியர்ஸ்.

2023ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்நிலையில் தற்போதிருந்தே அனைத்து அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். அந்தவகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் தற்போது முழுவீச்சில் தயாராகி வருகிறது.

இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக பெங்களூரு அணிக்காக விளையாடி மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்த ஏ.பி.டி வில்லியர்ஸ் மற்றும் கிரிஸ் கெயில் ஆகியோர், பெங்களூர் அணி நிர்வாகத்தின் சிறப்பு அழைப்பின் பேரில் தற்போது இந்தியா வருகை தந்துள்ளனர். அவர்கள் முன்னிலையில் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்த ஆண்டிற்கான பெங்களூரு அணியின் ஜெர்சி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஜெர்சி வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஏ.பி.டி வில்லியர்ஸிடம் கிரிஸ் கெயில் நேர்காணல் நடத்தினார். அப்போது விராட் கோலி உடனான உறவு குறித்து பேசிய ஏ.பி.டி வில்லியர்ஸ், “எனக்கு நிறைய நினைவுகள் பெங்களூரு அணியில் இருக்கிறது. நான் விராட் கோலியை முதன்முதலில் சந்தித்தபோது அவர் மிகவும் துணிச்சலாக இருந்தார். அதேநேரம் திமிர்பிடித்தவராகவும் இருக்கிறாரே என்று நினைத்தேன். குறிப்பாக அவரது ஹேர் ஸ்டைல் அவருக்கு மிகவும் கெத்தாக இருக்கும். ஆனால் நான் விராட் கோலியை பற்றி நன்கு புரிந்துகொண்ட சமயத்திலிருந்து அவர் மீதான என்னுடைய பார்வை மாறியது. சொல்லப்போனால் விராட் கோலி மீது மரியாதை கூடியது. அவர் நல்ல வீரர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட” என்றுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com