ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுகிறது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும் என்பதால், இரண்டு அணிகளும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளன. விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், டெல்லி டாஸ் வென்றுள்ளது. அத்துடன் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
டெல்லி அணியில் கோலின் இன்கிராமிற்கு பதில் கோலின் முன்ரோ சேர்க்கப்பட்டுள்ளார். ஹைதராபாத் அணியில் யூசப் பதானிற்கு பதில் தீபக் ஹூடா இடம்பிடித்துள்ளார். இன்றைய போட்டியில் தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இரண்டாவது தகுதிச்சுற்றில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.