விளையாட்டு
பேர்ஸ்டோ அரைசதம்; டெல்லிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஹைதராபாத்
பேர்ஸ்டோ அரைசதம்; டெல்லிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஹைதராபாத்
அபுதாபியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான இந்த சீஸனின் 11-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி இருபது ஓவர் முடிவில் 162 ரன்களை 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு எடுத்தது.
அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் வார்னர் (45 ரன்கள்), பேர்ஸ்டோ (53 ரன்கள்), வில்லியம்சன் (41 ரன்கள்) சூப்பராக ரன்கள் குவித்தனர்.
இதனையடுத்து 163 ரன்களை விரட்டி வருகிறது பலமான பேட்டிங் லைன் அப் கொண்ட டெல்லி.