‘ஹைதராபாத்திடம் அதிரடி காட்டுமா ஸ்ரேயாஸ் இளம் படை?’ - டெல்லி முதலில் பேட்டிங்

‘ஹைதராபாத்திடம் அதிரடி காட்டுமா ஸ்ரேயாஸ் இளம் படை?’ - டெல்லி முதலில் பேட்டிங்

‘ஹைதராபாத்திடம் அதிரடி காட்டுமா ஸ்ரேயாஸ் இளம் படை?’ - டெல்லி முதலில் பேட்டிங்
Published on

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

12வது ஐபிஎல் தொடரின் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு போட்டியிலும் எதாவது ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்துவிடுகிறது. இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 16வது லீக் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. 

இதில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனால், டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்கிறது. ஹைதராபாத் அணியில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால், டெல்லி அணியில் இஷாந்த் சர்மா, ராகுல் திவாதியா, அக்ஸர் படேல் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹனுமா விஹாரி, ஹர்ஷல் படேல் நீக்கப்பட்டுள்ளனர். 

ஹைதராபாத் அணி 4 போட்டிகளில் விளையாடி 3இல் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணி 4இல் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் அணியில் வார்னர், பேர்ஸ்டோவ் பேட்டிங்கில் மிரட்டுகின்றனர். டெல்லி அணியில் பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் பேட்டிங்கில் கலக்குகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com