\
DC VS RR : தவான் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் கூட்டணியால் கரை சேர்ந்த டெல்லி 

DC VS RR : தவான் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் கூட்டணியால் கரை சேர்ந்த டெல்லி 

DC VS RR : தவான் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் கூட்டணியால் கரை சேர்ந்த டெல்லி 
Published on

துபாயில் நடைபெற்று வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்தது. 

டெல்லி அணியின் பிருத்வி ஷா மற்றும் ரஹானே அடுத்தடுத்து ராஜஸ்தான் பவுலர் ஆர்ச்சரின் வேகத்தில் விக்கெட்டுகளை இழக்க பவர்பிளேயிலேயே தடுமாறியது டெல்லி அணி. 

பின்னர் களம் இறங்கிய டெல்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ஓப்பனர் தவானுடன் இணைந்து பொறுப்போடு விளையாடினார். இருவரும் இணைந்து 85 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

தவான் 33 பந்துகளில் 57 ரன்களை குவித்து அவுட்டானார். அதில் 2 சிக்ஸர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும்.

கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 43 பந்துகளில் 53 ரன்கள் குவித்திருந்தார். 

இருபது ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை குவித்தது டெல்லி.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com