\
தவான் சதத்தால் கரை சேர்ந்த டெல்லி - பஞ்சாப் வெற்றிக்கு 165 ரன்கள் தேவை 

தவான் சதத்தால் கரை சேர்ந்த டெல்லி - பஞ்சாப் வெற்றிக்கு 165 ரன்கள் தேவை 

தவான் சதத்தால் கரை சேர்ந்த டெல்லி - பஞ்சாப் வெற்றிக்கு 165 ரன்கள் தேவை 
Published on

துபாயில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீஸனின் 38வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்தது. 

பிருத்வி ஷா, ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஸ்டாய்னிஸ் என டெல்லி பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப நல்ல ஃபார்மில் உள்ள ஷிகார் தவான் மட்டும் நிலைத்து நின்று விளையாடினார்.

கடந்த ஆட்டத்தை போலவே தவான் இந்த ஆட்டத்திலும் சதம் விளாசி அசத்தினார். பஞ்சாப் அணியின் பவுலர்கள் சார்பில் ஷமி அற்புதமாக பந்துவீசினார். இருபது ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்தது. 

இதனையடுத்து வலுவான பேட்டிங் லைன் அப் கொண்ட பஞ்சாப் அணி 165 ரன்களை சேஸ் செய்து வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com