ஸ்டாய்னிஸ் ’கோல்டன் டக்’! அடுத்தடுத்து விக்கெட் இழந்து தடுமாறும் டெல்லி

ஸ்டாய்னிஸ் ’கோல்டன் டக்’! அடுத்தடுத்து விக்கெட் இழந்து தடுமாறும் டெல்லி

ஸ்டாய்னிஸ் ’கோல்டன் டக்’! அடுத்தடுத்து விக்கெட் இழந்து தடுமாறும் டெல்லி
Published on

துபாயில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

T

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து வருகிறது. டெல்லி அணிக்காக ஸ்டாய்னிசும், தவானும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். கடந்த போட்டியில் ஸ்டாய்னிஸ் தொடக்க வீரராக விளையாடி ரன்களை குவித்ததால் அதேபோல் இந்தப்போட்டியில் நிகழும் என்ற எதிர்பார்ப்பு டெல்லி ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

அதிரடியாக ஸ்டாய்னிஸ் ரன் குவிப்பார் என எதிர்பார்த்த நிலையில் போல்ட் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். ஷார்ட் லென்த்தாக வீசப்பட்ட அந்த பந்து ஸ்டாய்னிஸின் பேட்டில் பட்டு எட்ஜாகி வெளியேறியது. 

தொடர்ந்தது மூன்றாவது ஓவரில் ரஹானே விக்கெட்டையும் வீழ்த்தி டெல்லி அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார் போல்ட். அதேபோல், மூத்த வீரரும் இந்த ஐபிஎல் சீசனில் இரண்டு சதங்களை விளாசியவருமான ஷிகர் தவனும் ஜெயந்த் யாதவ் பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆகி அதிர்ச்சி அளித்தார். டெல்லி அணிக்கு ஏற்கனவே பிரச்னையாக இருந்து வந்த பவர் பிளேவில் விக்கெட்டுகளை இழக்கும் சோகம் இந்தப் போட்டியிலும் தொடர்கிறது.

வழக்கம் போல டெல்லி அணி பவர் பிளேயில் சொதப்பி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com