\
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இளம் வீரர்களுடன் களமிறங்கும் இந்திய அணி

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இளம் வீரர்களுடன் களமிறங்கும் இந்திய அணி

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இளம் வீரர்களுடன் களமிறங்கும் இந்திய அணி
Published on

இந்திய-கனடா அணிகளுக்கு இடையேயான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நாளை தொடங்குகிறது. 

நாளை துவங்கவுள்ள இந்திய-கனடா அணிகளுக்கு இடையேயான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், இந்திய அணிக்காக ஒற்றையர் பிரிவில் ராம்குமார் ராமநாதன், யூகி பாம்ரி ஆகியோர் களமிறங்குகின்றனனர். ரோகன் போபண்ணா-சாகேத் மைனேனி ஆகியோர் இரட்டையர் பிரிவில் விளையாட உள்ளனர். புரவ் ராஜா, பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அணியில் உள்ளனர். கனடா அணியில் சர்வதேச தரநிலையில் 51-வது இடம் வகிக்கும் 18 வயது டெனிஸ் ஷபோவாலோவ் பெரும் பலமாக இருக்கிறார். இதேபோல் அனுபவ வீரரான வாசெக் போஸ்பிசிலும் அந்த அணியில் உள்ளார். காயம் காரணமாக நட்சத்திர வீரர் மிலோஸ் ரானிச் விலகியுள்ள நிலையில், ப்ராட்லே ஜுனர் கனடா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com