நிகிடியை தொடர்ந்து சிஎஸ்கே-வில் இருந்து இங்கிலாந்து வீரரும் விலகல்!

நிகிடியை தொடர்ந்து சிஎஸ்கே-வில் இருந்து இங்கிலாந்து வீரரும் விலகல்!

நிகிடியை தொடர்ந்து சிஎஸ்கே-வில் இருந்து இங்கிலாந்து வீரரும் விலகல்!
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் டேவிட் வில்லே விலகியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் டேவிட் வில்லே. ஆல்ரவுண்டரான இவர், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கிறார். இவர் மனைவி கரோலின் கர்ப்பமாக உள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக அவர் இருப்பதால், அவருடன் இருக்க டேவிட் வில்லே முடிவு செய்துள்ளார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் இடம்பெறவில்லை. இதை,சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கிடம் அவர் தெரிவித் துள்ளார்.

‘நாங்கள் எங்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்திருக்கிறோம். இந்த நேரத்தில் என் மனைவியுடன் இருக்க முடிவு செய்துள்ளேன். ஐபிஎல்- தொடரில் இருந்து விலகுவது என்பது எளிதான முடிவு அல்ல. இருந்தாலும் குடும்பதான் முக்கியம் என்ற நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளேன்’’ என்று வில்லே தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் நிகிடி, ஏற்கனவே காயம் காரணமாக சிஎஸ்கே அணியில் இருந்து விலகியுள்ள நிலையில், இவரும் விலகி இருப்பது பின்னடைவு என்று கூறப்படுகிறது.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com