டேவிட் வில்லே வேகத்தில் சரிந்தது வெஸ்ட் இண்டீஸ்!

டேவிட் வில்லே வேகத்தில் சரிந்தது வெஸ்ட் இண்டீஸ்!
டேவிட் வில்லே வேகத்தில் சரிந்தது வெஸ்ட் இண்டீஸ்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட் டித் தொடர்களுக்குப் பிறகு டி20 தொடரில் பங்கேற்றது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 2வது டி20 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி, 11.5 ஓவர்களில் 45 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. இதை யடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி, நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, டேவிட் வில்லே (David Willey) வின் சிறப்பான பந்துவீச்சில் நிலை குலைந்தது. அந்த அணி, 13 ஓவர்களில் 71 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. மூன்று பேர் மட்டும் தலா 11 ரன் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க எண்ணைத் தாண்டவில்லை.

டேவிட் வில்லே, மூன்று ஓவர்கள் வீசி, வெறும் 7 ரன்னை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். மார்க்வுட் 3 விக்கெட்டை சாய்த் தார்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 10.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹேல்ஸ் 13 பந்தில் 20 ரன்னும் பேர்ஸ்டோவ் 31 பந்தில் 37 ரன்னும் எடுத்தனர். டேவிட் வார்னர் ஆட்ட நாயகன் விருதும், கிறிஸ் ஜோர்டான் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com