முன்னாள் காதலரின் முகமூடி அணிந்து கிண்டல்: வார்னர் மனைவி உடைத்த ரகசியம்!
வார்னர் மனைவியின் முன்னாள் காதலரின் முகமூடியை அணிந்து தென்னாப்பிரிக்க ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்துள் ளனர்.
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய பிரச்னையில் ஆஸ்திரேலிய அணியிலி ருந்து ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பேன்கிராஃப்ட் நீக்கப்பட்டுள்ளனர். ஸ்மித், வார்னருக்கு ஓராண்டும் பேன்கிராப்டுக்கு ஒன்பது மாதமும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மூன்று பேருமே நடந்த தவறுக்கு கண்ணீர் விட்டு மன்னிப்புக் கேட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்று பேட்டியளித்து டேவிட் வார்னரின் மனைவி கேண்டிஸ், அதில் பரபரப்பு சம்பவங்களைத் தெரிவித்துள்ளார்.
’என் கணவரின் மனதில் தவறான திட்டம் தோன்ற நானே காரணம் என நினைக்கிறேன். அந்த குற்றஉணர்ச்சி என்னை கொன்று விடும் போல் இருக்கிறது. தென்னாப்பிரிக்க தொடரின் போது என் மீதும், குழந்தைகள் மீதும் விழுந்த அவதூறு பேச்சுகளுக்கு பதிலடி கொடுக்கவே வார்னர் அவ்வாறு செய்து விட்டதாக நினைக்கிறேன். எனது கடந்த கால வாழ்க்கையை இழுத்து அந்த நாட்டு ரசிகர்கள் மோசமாக நடந்து கொண்டனர். போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியின் போது, சில ரசிகர்கள் எனது முன்னாள் காதலரின் முகமூடியை அணிந்து கொண்டு என்னை கேவலமாகக் கிண்டல் செய்தனர். அவமானப்படுத்தினர். இதுபோன்ற சம்பவங்கள் வார்னரை தடுமாற வைத்து விட்டது. ஆட்டம் முடிந்து அறைக்கு வந்த அவர், கண்ணீர் விட்டு அழுதார். நானும், குழந்தைகளும் வேதனை அடைந்தோம்’ என்று தெரிவித்துள்ளார்.
கேண்டிஸ், வார்னரை 2015-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வார்னருக்கு முன். நியூசிலாந்தைச் சேர்ந்த ரக்பி வீரர் சன்னி பில் வில்லியம்ஸ் என்பவரைக் காதலித்தார். இவர்கள் இருவரும் கழிவறையில் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சி 2007-ல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு அவரை பிரிந்த கேண்டிஸ், வார்னரை திருமணம் செய்துகொண்டார்.
(சன்னி பில் வில்லியம்ஸ்)
டர்பனில் நடந்த போட்டியின் போது, தென்னாப்பிரிக்க வீரர் டி காக்கும் வார்னரும் மோதிக்கொண்டனர். இதற்கு தனது மனைவி பற்றி டி காக், மோசமாக பேசியதுதான் காரணம் என்று வார்னர் கூறியிருந்தார். அடுத்த போட்டியில் சில ரசிகர்கள், வார்னரின் முன்னாள் காதலர் முகமூடி அணிந்தபடி வந்தனர். இது வார்னருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அப்போது ஒரு ரசிகர் வேண்டுமென்றே வார்னரிடம் வாக்குவாதம் செய்தார்.
கேண்டிஸின் நடத்தை குறித்து தென்னாப்பிரிக்க ரசிகர்களின் தொடர்ந்து சீண்டியதால்தான் அவர், பந்தை சேதப்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்று நினைத்திருக்கலாம் என கேண்டிஸ் தெரிவித்துள்ளார்.