சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மீண்டும் கேப்டனானார் டேவிட் வார்னர்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மீண்டும் கேப்டனானார் டேவிட் வார்னர்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மீண்டும் கேப்டனானார் டேவிட் வார்னர்
Published on

இந்தாண்டு நடைபெறவுள்ள 13 ஆவது ஐபிஎல் டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. கடந்த இரு ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார் நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன். 2018 ஆம் ஆண்டில் சன்ரைசர்ஸ் அணி, ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடித் தோற்றது. கடந்த ஆண்டு அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றது.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 2015 முதல் 2017 வரை சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் ஏற்கெனவே செயல்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்காவில், கிரிக்கெட் பந்தைச் சேதப்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் வார்னருக்கும் ஸ்மித்துக்கும் ஓராண்டு காலம் தடை விதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். இதனால் 2018 ஐபிஎல் போட்டியில் டேவிட் வார்னர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com