‘தூங்காமல் அழுகிறார், மன்னித்து விடுங்கள்’ வார்னர் மனைவி உருக்கம்!
தன் கணவரை அனைவரும் மன்னிக்க வேண்டும் என டேவிட் வார்னரின் மனைவி உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்று பேட்டியளித்துள்ள வார்னர் மனைவி, “தென்னாப்ரிக்க அணியுடனான ஆட்டத்தில் பந்தை சேதப்படுத்திய பிரச்னையில் என் கணவர் சிக்கியுள்ளார். அந்த தவறுக்கு நான்தான் காரணம் என கருதுகிறேன். குற்ற உணர்ச்சி என்னை உயிருடன் கொல்கிறது. தற்போது முற்றிலுமாக கொன்றுவிட்டது. நான் மன்னிப்பு கேட்கவில்லை. ஆனால் என் கணவரை மன்னித்து விடுங்கள். அவர் தூங்கும் போது கண்ணீர் விட்டு அழுவதை பார்த்து நானும், என் குழந்தையும் வருத்தம் அடைந்தோம்” என்று கூறியுள்ளார்.