\
"இஞ்சி இடுப்பழகி" மெட்டுக்கு நடனமாடிய டேவிட் வார்னர் !

"இஞ்சி இடுப்பழகி" மெட்டுக்கு நடனமாடிய டேவிட் வார்னர் !

"இஞ்சி இடுப்பழகி" மெட்டுக்கு நடனமாடிய டேவிட் வார்னர் !
Published on

நடிகர் கமல்ஹாசன், சிவாஜி கணேசன் நடித்த "தேவர் மகன்" படத்தில் வரும் இஞ்சி இடுப்பழகி பாடலின் மெட்டுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் ஐபிஎல் டி20 போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் ஊரடங்கு அமலில் இருப்பதால், இந்தக் காலத்தில் வீட்டிலேயே இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் பலர் சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.

இதில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் கொஞ்சம் ஜாலியாக டிக்டாக்கில் தனது மனைவி குழந்தைகளுடன் நடனமாடிய வீடியோவை வெளியிட்டு வருகிறார். அண்மையில் கூட கேத்ரீன் கைப்பின் பாலிவுட் பாடலுக்குத் தனது மகளுடன் நடனமாடி வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு, தெலுங்கு பாடல் ஒன்றுக்குத் தனது மனைவி கேண்டிஸ் உடன் நடனமாடினார்.

இப்போது 1992 ஆம் ஆண்டு பரதன் இயக்கத்தில் வெளியான படம் "தேவர் மகன்". இந்தப் படத்தில் கமல்ஹாசன், சிவாஜி கணேசன், ரேவதி, கெளதமி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் கவிஞர் வாலி எழுதிய "இஞ்சி இடுப்பழகி" பாடல் மிகவும் பிரபலமானது. கமல்ஹாசன், ஜானகி பாடிய இந்தப் பாடல் இப்போது வரை பட்டிதொட்டியெங்கும் பிரபலம். இந்நிலையில் இந்தப் பாடலின் மெட்டுக்கு டேவிட் வார்னர் குடும்பத்தினர் நடனமாடியுள்ளனர். இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வார்னர் "நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com