\
படிஸ்டா
படிஸ்டாpt web

டேவ் படிஸ்டா ஞாபகம் இருக்கிறதா? உடல் இளைத்து வயோதிகர் போல் தோற்றம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

கட்டுடலால் போட்டிக்களத்தை அலங்கரித்த பிரபல மல்யுத்த வீரர் டேவ் படிஸ்டா உடல் இளைத்து வயோதிகர் போல் தோற்றமளிப்பது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.
Published on

141 கிலோ எடை... இறுக்கி முறுக்கேற்றப்பட்ட உடல்வாகு. நரம்புகள் புடைக்க WWE மல்யுத்த களங்களில் எதிராளிகளை வேட்டையாடும் படிஸ்டாவின் ஆட்ட உத்திக்கு ரசிகர்கள் கோடி. கடைசியாக அவர் மல்யுத்த களத்தில் இறங்கியது 2010-ல். தம்மைப் போன்றே புஜபல பராக்கிரமனான ட்ரிப்பிள் ஹெச்-சை எதிர்த்து களமாடினார். இதன்பின்னர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார் படிஸ்டா.

திரைப்படங்கள், ஆங்கில தொடர் நாடகங்கள் என நடித்து வரும் படிஸ்டாவுக்கு வயது 55. தற்போது திரைப்பட விழா ஒன்றில் அவரைக் கண்ட ரசிகர்கள் உள்ளிட்டோர் அதிர்ந்து போயினர். காரணம், 40 கிலோ அளவுக்கு உடல் எடையை குறைந்து ஆளே மாறிப்போயிருந்தார் அவர். திரைப்படங்களில் நடிக்கும் போது அதிக எடை தமக்கு தொல்லையாக இருந்ததாக அவர் தெரிவித்தார். தி கில்லர்ஸ் கேம் என்ற திரைப்படத்துக்காக வெகுவாக உடல் எடையை குறைத்துள்ளார் படிஸ்டா. உடல் எடையை குறைப்பது, சாவதற்கு சமமானது என அவர் தெரிவித்துள்ளார். அந்தளவுக்கு உடல் எடையை குறைக்க போராட வேண்டியிருந்ததாக பாடிஸ்டா தெரிவித்துள்ளார்.

படிஸ்டா
பல நூறு கோடிகள் தமிழக அரசுக்கு குத்தகை தொகை பாக்கி.. இத்தனை நிறுவனங்கள் லிஸ்டில் இருக்கா?!

2019-ஆம் ஆண்டு உடல் உடையை குறைக்கும் முடிவுக்கு தாம் வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். உணவு கட்டுப்பாட்டை பின்பற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க தொடங்கிய போது ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமையால் தாம் அவதிப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இரவு படுக்கைக்கு செல்வதற்கு 3 அல்லது நான்கு மணி நேரத்துக்கு முன்பாகவே உணவை எடுத்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தசைகளை இழந்திருப்பதால் தாம் இப்போது செளகரியமாக இருப்பதாக படிஸ்டா தெரிவித்துள்ளார். படிஸ்டா-வின் முடிவு எதுவாக இருந்தாலும் அஜானுபாகுவாக அவரைக் கண்ட ரசிகர்களுக்கு இப்போதைய தோற்றம் சற்று அதிருப்திதான்.

படிஸ்டா
”முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் தயார்.. நீதி கிடைக்க வேண்டும் என்பதே என் கவலை” - மம்தா பானர்ஜி
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com