\
பந்தை சேதப்படுத்துவதா? இலங்கை கிரிக்கெட் வீரருக்கு அபராதம்!

பந்தை சேதப்படுத்துவதா? இலங்கை கிரிக்கெட் வீரருக்கு அபராதம்!

பந்தை சேதப்படுத்துவதா? இலங்கை கிரிக்கெட் வீரருக்கு அபராதம்!
Published on: 

பந்தை சேதப்படுத்தியதாக இலங்கை கிரிக்கெட் வீரருக்கு அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நாக்பூரில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. நேற்று 50 வது ஓவரை வீசிய இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் ஷனகா, பந்தை சேதப்படுத்தியதை நடுவர்கள் கண்டனர். இதை போட்டி நடுவர் டேவின் பூன் கவனத்துக்கு கொண்டு சென்றனர். 

இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நடைமுறையை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கான போட்டிக்கட்டணத்தில் 75 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com