\
இலங்கை சுழற்பந்துவீச்சாளர் தனஞ்செயாவுக்கு 1 வருடம் தடை!

இலங்கை சுழற்பந்துவீச்சாளர் தனஞ்செயாவுக்கு 1 வருடம் தடை!

இலங்கை சுழற்பந்துவீச்சாளர் தனஞ்செயாவுக்கு 1 வருடம் தடை!
Published on

இலங்கை சுழற்பந்துவீச்சாளர் அகிலா தனஞ்செயாவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு வருடம் தடை விதித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்செயா. கடந்த மாதம் காலேயில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இவரது பந்துவீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக நடுவர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் தெரிவித்திருந்தனர். 

கடந்த டிசம்பர் மாதமும் அவர் மீது இதே புகார் கூறப்பட்டிருந்ததை அடுத்து, அவரது பந்து வீச்சு சோதனைக்கு உட்படுத்தப் பட்டது. அப்போது, விதிமுறைக்கு புறம்பாக அவரது பந்துவீச்சு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 2 வருடத்துக்குள் 2-வது முறையாக இத்தகைய சர்ச்சையில் அவர் மாட்டிக் கொண்டதால் அவருக்கு ஓராண்டு பந்து வீச தடை விதிப்பதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com