விளையாட்டு
ஆக்ரோஷம் இல்லாத அணி: வெஸ்ட் இண்டீசை சாடும் அம்ப்ரோஸ்
ஆக்ரோஷம் இல்லாத அணி: வெஸ்ட் இண்டீசை சாடும் அம்ப்ரோஸ்
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி படு தோல்வியடைந்தது. இதையடுத்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அம்ப்ரோஸ், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை கடுமையாகச் சாடியுள்ளார். ’இந்தப் போட்டியை பார்த்து ஏமாற்றமடைந்தேன். இங்கிலாந்து அணிக்கு எந்த விதத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணி சவாலாக இல்லை. போட்டி நடந்த நாட்களில் வீரர்களிடம் எந்த ஆக்ரோஷத்தையும் பார்க்க முடியவில்லை. இதனால் இங்கிலாந்தை வெஸ்ட் இண்டீஸ் வெல்லும் என்ற நம்பிக்கை சுத்தமாக போய்விட்டது. அணி, பரிதாபகரமானதாக மாறியிருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

