\
ஆஸி.வீரர் கம்மின்ஸுக்கு ரெஸ்ட்!

ஆஸி.வீரர் கம்மின்ஸுக்கு ரெஸ்ட்!

ஆஸி.வீரர் கம்மின்ஸுக்கு ரெஸ்ட்!
Published on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கம்மின்ஸூக்கு இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த அணியில் வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸும் இடம் பெற்றுள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் மட்டுமே பங்கேற்பார் என்றும் டி20 போட்டியில் பங்கேற்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்த கம்மின்ஸ், அணியில் மீண்டும் இடம்பிடித்தபின், இந்த ஆண்டு அதிகமானப் போட்டிகளில் விளையாடிவிட்டார். அதனால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆஷஸ் தொடருக்கு அவர் தயாராக வேண்டும் என்பதால் இந்த ஓய்வு வழங்கப்படுகிறது’ என்று ஆஸ்திரேலிய தேர்வு குழுவைச் சேர்ந்த ஹோன்ஸ் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com